முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது குறித்து...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 5:16 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் - DNS
பகிர்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க விமர்சையாக தொடங்கியது.

சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பெரிய வைரத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.

Advertisement

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் - DNS
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் - DNS

விழாவின் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருமண கோலத்தில் சன்னதி முன்பு இருந்த பெரிய வைர தேரில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காலை 6.45 மணியளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு சென்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் பெரிய ரத வீதி வழியாக கிரிவலப் பாதையை சுற்றி வந்து பதினோரு மணிக்கு மேல் நிலையை வந்து அடையும். தேர் நிலையை வந்துஅடையும் வரை கோயில் நடை சாத்தப்படும் தேர் நிலைக்கு வந்த பின்னரே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேரோட்ட நிகழ்வை காண மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

summary

The Panguni Chariot Festival at the Thiruparankundram Subramaniya Swamy Temple commenced grandly, with the resounding "Arogara" chants of thousands of devotees piercing the skies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments