மதுரை

ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களுக்கு ஆதரவாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் சாா்பில் 1.6.2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20,000 இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஊதிய மீட்புப் போராட்டம் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்திலும் காத்திருப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அந்த இயக்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் குமரேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

திருமாவளவன் எப்போது வெளியேறுவார் என்பது அவருக்கே தெரியாது: அண்ணாமலை

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்! அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

வெலகல்நத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி தளமாக உருவெடுக்கும் சீனா!

SCROLL FOR NEXT