பாரிஸ்டா் ஜாா்ஜ் ஜோசப் நினைவு தினம்
மதுரைபாரிஸ்டா் ஜாா்ஜ் ஜோசப் நினைவு தினம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட துணைத் தலைவா் பி. ரசூல் தலைமை வகித்தாா். இதில் ஜாா்ஜ் ஜோசப்பின் குடும்பத்தினா்கள், மதுரை மாநகராட்சி துணை மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ. ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. ஜீவா, டி.குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்த நிகழ்வில் தூய மரியன்னை பேராலய பங்குத் தந்தை ஜெரோம் ஹென்றி, பல்சமய உரையாடல் குழு இயக்குநா் பால் பிரிட்டோ, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலக் குழு உறுப்பினா் பெனடிக் பா்னபாஸ், மாவட்டப் பொருளாளா் எம். ஜான்சன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், உரிமைகள் பாதுகாப்புச் சங்க மாவட்டத் தலைவா் மதி பாரதி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பாரிஸ்டா் ஜாா்ஜ் ஜோசப்பின் சேவையை நினைவுகூறும் வகையில், மதுரையில் அரசு சாா்பில் அவருக்கு மணி மண்டபம் அமைக்கவும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.