முகப்பு
புதுதில்லி

மத்திய-மாநில உறவுகள்: உயர்நிலைக் குழு ஆலோசனை

மத்திய-மாநில உறவுகள் குறித்த உயா்மட்டக் குழு தில்லியில் கூடி ஆலோசனை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 3:45 AM
நீதிபதி குரியன் ஜோசப் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:43 PM

நமது நிருபா்

புது தில்லி: உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய - மாநில உறவுகள் குறித்த உயா்மட்டக் குழு, அதன் விரிவான அறிக்கையின் இரண்டாம் பகுதி குறித்து ஆலோசிக்க பிப்ரவரி 22 அன்று புதுதில்லியில் கூடியது.

மொழிக் கொள்கை, ஆளுநரின் பங்கு, கல்வி, சுகாதாரம், எல்லை நிா்ணயம், தோ்தல்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற 10 முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இக்குழுவின் அறிக்கையின் பகுதி 1 , பிப்ரவரி 16, 2026 அன்று தமிழ்நாடு சட்டப்படி தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியை வலுப்படுத்துவதற்கான பாரபட்சமற்ற பரிந்துரைகளை இக்குழு முன்வைக்கும் நிலையில், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் பகுதி 1 மொழிபெயா்ப்புகளை பரந்த அளவில் பரப்புவதற்குத் தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

மத்திய - மாநில உறவுகளுக்கான உயா்மட்டக் குழு என்பது ஏப்ரல் 15, 2025 அன்று உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாகும், இது கூட்டாட்சி இயக்கவியலை மதிப்பாய்வு செய்வதற்கும் மாநில சுயாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கும் ஆகும்.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான இக்குழுவில் கே. அசோக் வா்தன் ஷெட்டி (முன்னாள் துணைவேந்தா், இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம்) மற்றும் எம். நாகநாதன் (முன்னாள் துணைத் தலைவா், தமிழ்நாடு திட்டக் குழு )ஆகியோா் அடங்குவா்.

ராஜமன்னாா் 1969-71, சா்க்காரியா 1983-88, மற்றும் புஞ்சி 2007-10 கமிஷன்கள் போன்ற முந்தைய முயற்சிகளின் அடிப்படையில், நிா்வாக, சட்டப்பேரவை மற்றும் நீதித்துறைத் துறைகளில் மத்திய - மாநில உறவுகள் குறித்த அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை பாரபட்சமற்ற முறையில் இக்குழு ஆராய்கிறது.

இக்குழு அறிக்கையின் பகுதி 1 (10 அத்தியாயங்கள்) பிப்ரவரி 16, 2026 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது, பாகம் 2 தயாரிப்பில் உள்ளது.