முகப்பு
ராமநாதபுரம்

ஜனவரி மாத மக்கள் தொடர்பு முகாம்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தவுள்ள மக்கள் தொடர்பு முகாம்கள் குறித்து ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தவுள்ள மக்கள் தொடர்பு முகாம்கள் குறித்து ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

  இது குறித்த செய்திக் குறிப்பு: (பங்கு பெற வேண்டிய கிராமங்கள் அடைப்புக்குறிக்குள்)

  ஜன.9 கமுதி அருகே என்.வேப்பங்குளம். தலைமை-ஆட்சியர் (நீராவி, என்.கரிசல்குளம்), ஜன.23 திருவாடானா தாலுகாவில் புல்லமடை கிராமம், தலைமை-மாவட்ட  வருவாய் அலுவலர், (சித்தனேந்தல்,மேலமடை).

  ஜன.30ல் ராமநாதபுரம் தாலுகாவில் மல்லல் கிராமம். தலைமை-வருவாய் கோட்டாட்சியர், ராமநாதபுரம், (களக்குடி, மேலச்சீத்தை). கடலாடி தாலுகாவில் வாலம்பட்டி கிராமம். தலைமை-வருவாய் கோட்டாட்சியர், பரமக்குடி, (டி.கரிசல்குளம், வெள்ளையாபுரம்).

  முதுகுளத்தூர் தாலுகாவில் மேலக்கொடுமலூர் கிராமம், தலைமை-மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், ராமநாதபுரம் (கீழக்கொடுமலூர், நல்லுக்குறிச்சி).

  பரமக்குடி தாலுகாவில் சூடியூர் கிராமம், தலைமை-உதவி ஆணையர் (ஆயம்)ராமநாதபுரம், (நெடும்புலி,திருவரங்கி).

  பொதுமக்கள் இந்த முகாம்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →