ராமநாதபுரம்

சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்துகள்

DIN

கமுதி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்தனர்.
கமுதி, அபிராமம், பெருநாழி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் விபத்துகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஐ தாண்டியுள்ளது.
இதில் பெரும்பாலானவை சாலையோரம்  நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் மற்றும் வாகனங்களில் மோதி ஏற்பட்ட விபத்துகள் தான்.
சாலையோரம் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் எச்சரிக்கை விளக்குகள் எரிய விடப்படுவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT