ராமநாதபுரம்

கமுதி பகுதியில் கண்மாய், ஊருணியில் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய், ஊருணிகளில் மண் அள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

DIN

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கண்மாய், ஊருணிகளில் மண் அள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
  ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கணமாய், ஊருணிகளில் மண் எடுக்க மாவட்ட ஆட்சியர் நடராஜன் அனுமதி அளித்துள்ளார்.
 எனவே கமுதி பகுதியில் உள்ள விவசாயிகள், அந்தந்த பகுதிகளின் கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமை சான்று பெற்று கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தங்கள் மனுக்களை அளிக்க வேண்டும்.
  இவற்றை வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு தலா 20 டிராக்டர்கள் மண் எடுக்க அனுமதி அளிப்பர்.
 இந்த மண்ணை முற்றிலும் விவசாயத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT