ராமநாதபுரம்

"ஆசிரியர்கள் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்'

DIN

குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன்.
குழந்தைகள் தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள  குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:
குழந்தைகளே வருங்கால இந்தியாவின் தூண்கள். எனவே குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
படிக்கும் பருவத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டும் பாடங்களை நல்ல முறையில் படித்தும் வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறியது போல கனவுகளை நினைவாக்க நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். இதனையடுத்து ஆட்சியருக்கு காப்பக குழந்தைகள் சிலர் ராக்கி கயிறு கட்டினர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேனி, சைல்டுலைன் அமைப்பின் இயக்குநர் எஸ். கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT