ராமநாதபுரம்

சார்பு-நீதிமன்றம் திறப்பு விழா: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை முதுகுளத்தூர் வருகை

DIN

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதன்கிழமை முதுகுளத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படவுள்ள சார்பு- நீதிமன்றத்தை திறந்து வைக்கவுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு- நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சார்பு- நீதிமன்றத்தை திறந்து வைக்க இருக்கிறார்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தமிழக சட்டத்துறை அமைச்சர் வி.சண்முகம், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன், டி.ஐ.ஜி(பொறுப்பு) பிரதீப்குமர், எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா, முதுகுளத்தூர் வழக்குரைஞர் சங்க தலைவர் டி.ராஜசேகர்,செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோரும் வாழ்த்திப் பேசுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி வரவேற்கிறார். ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.வி.அணில்குமார் நன்றி கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT