ராமநாதபுரம்

ராமேசுவரத்துக்கு பேருந்தில் 20 கிலோ கஞ்சா கடத்தல்: 2 பேர் கைது

மதுரையிலிருந்து அரசுப்பேருந்து மூலமாக இலங்கைக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற உசிலம்பட்டியை சேர்ந்த இரு இளைஞர்களை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

DIN

மதுரையிலிருந்து அரசுப்பேருந்து மூலமாக இலங்கைக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற உசிலம்பட்டியை சேர்ந்த இரு இளைஞர்களை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து அரசுப்பேருந்து ஒன்றில் ராமேசுவரத்துக்கு இருவர் கஞ்சா பொட்டலங்களை இலங்கைக்கு கடத்தும் நோக்கில் கொண்டு வருவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் மண்டபம் பேருந்து நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸார் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து வந்த அரசுப்பேருந்தில் பயணம் செய்த இரு இளைஞர்களிடம் 20  கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.   ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன்(28)வெள்ளைப்பாண்டி(29) என  தெரிய வந்தது.  இலங்கைக்கு கஞ்சாவை கடத்துவதற்காக ராமேசுவரத்தில் உள்ள ஒரு நபரிடம் கஞ்சாவை ஒப்படைக்க இருவரும் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.  இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT