ராமநாதபுரம்

திருட்டு மணல் கும்பலை தடுத்த கிராம உதவியாளரை கொல்ல முயன்ற 3 பேர் மீது வழக்குப் பதிவு

DIN

சாயல்குடி அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த கும்பலைத் தடுக்க முயன்ற தலையாரியை (கிராம உதவியாளரை) தாக்கி கொலை செய்ய முயன்ற 3 பேர் மீது, போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூரில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. அதன்பேரில், மூக்கையூர் கிராம உதவியாளர் கருப்பன் மகன் கோபால், மணல் அள்ளும் இடத்துக்குச் சென்று விசாரித்துள்ளார். அதில், எந்தவித அனுமதியும் இன்றி மணல் அள்ளுவது தெரியவந்துள்ளது. உடனே, அவர்களைத் தடுத்த கிராம உதவியாளரை, அக்கும்பல் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளது. இது குறித்து கிராம உதவியாளர் கோபால் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், நரிப்பையூரைச் சேர்ந்த சத்யநாதன்(45), ராமர் (38), அப்துல் வஹாப் (50) ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT