ராமநாதபுரம்

திருவிழாவில் நடனமாடியவர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு

DIN

பரமக்குடி அருகே கோயில் திருவிழாவில் நடனமாடியவரை புதன்கிழமை தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் ஹரிஸ்குமார் (19). இவர் சத்திரக்குடி அருகே உள்ள தெஞ்சியேந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கலைநிகழ்ச்சிக்கு நடனமாடியுள்ளார். 
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அக்கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு மகன்கள் பிரபாகரன், ஜவகர், தினகரன், சுகுமார் ஆகியோர் ஹரிஸ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினராம். 
இதில் பலத்த காயமடைந்த ஹரிஸ்குமார், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் மேற்கண்ட 4 பேர் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT