ராமநாதபுரம்

குஞ்சங்குளம் பாம்பாற்றில் மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்

DIN

திருவாடானை அருகே குஞ்சங்குளம் பாம்பாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவாடானை அருகே குஞ்சங்குளம் கிராமத்தில் மணிமுத்தாற்றின் கிளை ஆறான பாம்பாறு செல்கிறது. இங்கு இரவு நேரங்களில் லாரி, ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பயனும் இல்லை எனப் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து குஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த அழகர் கூறுகையில், பாம்பாற்றில் இரவு நேரங்களில் லாரி, ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஆற்றில் சுமார் 5 மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே  மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டில் ஈடுபடுவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT