முகப்பு
ராமநாதபுரம்

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கமுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலர் ராமச்சந்திரன், அமைச்சர் மணிகண்டன்,  முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட செயலர் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலர் தர்மர்  மற்றும் மாவட்டத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
 அதைத்தொடர்ந்து, அப்துல்கலாம் நினைவிடம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆலயம் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலர் சரவணன், துணை செயலர் அருள்முருகன், இணைசெயலர்கள் வரதராஜன், முத்துராமலிங்கம், ஜோதிமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.