ராமநாதபுரம்

மணல் கடத்திய  4 பேர் கைது :   2 லாரிகள் பறிமுதல்

DIN

திருவாடனை அருகே வடக்கூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் திருவாடானை காவல்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக திருவாடானை அருகே வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மனோகர்(38), தோட்டாமங்கலத்தை சேர்ந்த சேகர்(55) ஆகிய இருவரும் லாரியில் வந்தனர். அந்த லாரியை சோனையிட்ட போது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து இருவைரயும் கைது செய்தார். 
அதே போல் சிவனூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் திருவாடானை காவல் துறை ஆய்வாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டார். அப்போது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து ஆனந்தூர் அருகே நத்த கோட்டை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் குனேஸ்வரன்(58), சிவனூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன்(45) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT