ராமநாதபுரம்

பரமக்குடி நகரில் கழிவுநீர் தேங்கி மாசுபடும் வேந்தோணி கால்வாய்: கேள்விக்குறியாகும் விவசாயப் பணிகள்

DIN

பரமக்குடி நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வேந்தோணி கால்வாய்ப் பகுதியில் விடப்பட்டு தேங்கி நிற்பதால், கால்வாய் முற்றிலும் மாசுபட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாய் வழியாக வேந்தோணி, வெங்கிட்டன்குறிச்சி, செல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு வேந்தோணி கால்வாய் வழியாக வைகைப் பாசன நீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயப் பணிகள் நடந்து வந்தன. 
 சமீப காலமாக வைகை ஆற்றில் பாசன நீர் வரத்து இல்லாத நிலையில் இக்கால்வாய் நகர்ப் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் பரமக்குடி நகரில் காட்டுப்பரமக்குடி, ஓட்டப்பாலம், பாரதி நகர், பொன்னையாபுரம், பாலன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வேந்தோணி கால்வாய் பகுதியில் விடப்படுகிறது. இக்கழிவுநீர் முறையாக கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்ச்சி செய்யாததால் கழிவுநீர் நீண்ட நாள்களாக தேங்கி கால்வாய் முழுவதும் மாசுபட்டு காணப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் பாசனநீர் மாசு படுவதுடன், விவசாயப்பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் இக்கால்வாய் பகுதியில் இருகரைகளையும் ஒட்டி ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  விவசாயிகளை பாதுகாத்திடவும், நகர்பகுதி மக்கள் கொசுத்தொல்லை இன்றி சுகாதாரத்துடன் வாழ்ந்திடவும் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகம் கால்வாய் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT