ராமநாதபுரம்

கமுதியில் தி.மு.க.வினர் சாலை மறியல்

DIN

தமிழகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கமுதியில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      ராமநாதபுரம் மாவட்டம், கமுதி திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தின் சார்பில், அக்கட்சியினர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கமுதி பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய-மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
    இப்போராட்டம், கமுதி வடக்கு ஒன்றியச் செயலர் எஸ்.கே.வி. முத்துராமலிங்கம் தலைமையிலும், மாவட்ட இலக்கிய புரவலர் அணி மலைச்சாமி, ஊராட்சி செயலர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நாகரெத்தினம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றியப் புரவலர் அணி செயலர் பாரதிதாஸன், போஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
     இதேபோல், தெற்கு ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலர் செந்தூர்பாண்டி தலைமையிலும், நகர் செயலர் அம்பலம் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், நேதாஜி சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அய்யனார், வழக்குரைஞர் நேதாஜி சாரதி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் முருகவேல், அச்சங்குளம் ஊராட்சி செயலர் கணேசன், கேசவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT