முகப்பு
ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

முதுகுளத்தூர் அருகே எம்.கடம்பன்குளத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 14 மே, 2018 at 11:55 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

முதுகுளத்தூர் அருகே எம்.கடம்பன்குளத்தில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி கடந்த 2014- 15 ஆம் ஆண்டு ரூ.22 ஆயிரம் செலவில் மராமத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் அபாயத்தில் உள்ளது. எனவே இக்குடிநீர் தொட்டியை மராமத்து செய்ய அக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.