ராமநாதபுரம்

பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணி: மதுரை பயணிகள் ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்

DIN

பாம்பன் ரயில் பாலப் பராமரிப்பு பணிக்காக மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (நவ. 16) வரை 5 நாள்களுக்கு ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் கடல் மீது 2.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் கடல் மீது புதிய ரயில் பாலம் அமைக்க ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை (நவ. 12) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 16) வரை 5 நாள்களுக்கு மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகிறது.
இந்த ரயில் மீண்டும் அங்கிருந்த மதுரைக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான துண்டு பிரசுரம் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள் எனவும், எனவே பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து இந்த ரயிலை ராமேசுவரம் வரை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT