ராமநாதபுரம்

புயல் பாதிப்பு: உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

DIN


கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளில் அரசின் நடவடிக்கை முழுமையடையவில்லை. இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், விவசாயிகள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கெடுப்பு என அரசு காலம் தாழ்த்தாமல் முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் என்றார். அப்போது தமாகா மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம்பிரபு, ஹசன் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT