ராமநாதபுரம்

பரமக்குடி கல்வி மாவட்ட  தடகளப் போட்டிகள்

DIN

பரமக்குடி ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
 ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன் ஆலோசனையின் பேரில் நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 
போட்டியை அப்பள்ளியின் தலைமையாசிரியை அமுதா தலைமையேற்று துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாரதிராஜா, எமனேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 
நயினார்கோவில் பள்ளி உடற்கல்வி இயக்குநர் மகேஷ்ராணி வரவேற்றார்.  
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 100 மீட்டர் மூதல் 3 ஆயிரம் மீட்டர் வரையிலான ஓட்டப்போட்டிகள், தடை தாண்டுதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்றன. 
இதில் கல்வி மாவட்டத்தில் உள்ள 44 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்களும், 217 மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கே.வசந்தி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT