ராமநாதபுரம்

மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் தாக்குதல்: கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை ஆலோசனை

DIN


மக்காச்சோளம் பயிரில் புதுவகையான படைப்புழுவின் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கமுதி வட்டத்தில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யக்கூடிய மேலராமநதி, நீராவி, என்.கரிசல்குளம், புதுக்கோட்டை, ஊ.கரிசல்குளம், நெறிஞ்சிபட்டி மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைக்காலத்தில் மக்காச்சோளம் விதைத்திடும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பயிர்களைத் தாக்கும் புதுவகையான படைப்புழு பற்றி சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த படைப்புழு சோளம், மக்ககாச்சோளம், நெல், கரும்பு, தக்காளி, வெங்காயம், நிலக்கடலை, பருத்தி, உருளைக் கிழங்கு, சிறுதானியங்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
படைப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து
கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) மீ.பாக்கியராஜ் கூறியது:
விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்துதல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் கட்டி படைப்புழு முட்டைகளை அழித்தல், என்பிஏ வைரஸ் கரைசல் தெளித்தல் போன்ற முறைகளில் புழுக்களை அழிக்கலாம்.
ரசாயன பூச்சிக்கொல்லிகளை வேளாண்மைத்துறை அலுவலர்களின் பரிந்துரையின்படி பயன்படுத்தி புழுக்களை அழிக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT