ராமநாதபுரம்

மங்களூருக்கு மீன் பிடிக்கச் சென்ற மண்டபம் மீனவர் கடலில் தவறி விழுந்தார்: தேடும் பணி தீவிரம்

DIN

கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடிக்க சென்ற மண்டபம் பகுதி மீனவர், ஞாயிற்றுக்கிழமை படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தும், கைது செய்தும் வருகின்றனர். மேலும், டீசல் விலை உயர்வு காரணமாக 80 சதவீதம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் மீனவர்கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர். சில மீனவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளி மாநிலங்களுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
இந்நிலையில், மண்டபம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (48), கடந்த சில நாள்களுக்கு முன், கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன்பிடிக்க சென்றார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் இருந்து பஞ்சவர்ணம் தவறி கடலில் விழுந்தார். அதையடுத்து பஞ்சவர்ணத்தை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT