ராமநாதபுரத்தில் வட்டார உழவர் நண்பர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மற்றும் பண்ணைக்குட்டைகள் குறித்த செயல்விளக்கப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபும் வட்டார உழவர் மையத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.கண்ணையா தலைமை வகித்துப் பேசுகையில், உழவர் நண்பர்கள் அனைவரும் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் நன்மைகளை கிராம விவசாயிகளிடம் கூறி அதற்கான விண்ணப்பங்களை சேகரிக்க வேண்டும் என்றார். ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம். கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசுகையில், நுண்ணீர் பாசன அமைப்பின் பராமரிப்பு மற்றும் பண்ணைக்குட்டை பயன்பாடு குறித்து விளக்கினார். பின்னர் பண்ணைக்குட்டைகள் அமைப்பது குறித்த செயல்விளக்கம் விவசாய நண்பர்களுக்கு செய்து காட்டப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் த.சுபாஷ் சந்திரபோஸ், ஜெ. சேகர் ஆகியோர் செய்திருந்தனர். ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப. கோசலாதேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.