ராமநாதபுரம்

தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து: சென்னை ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு

DIN

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியை மேற்கொண்டனர். 
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடிக்கு சரக்கு ரயில் போக்குவரத்து கடந்த 1914 ஆம் ஆண்டு செம்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் பின்னர் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.  
கடந்த 1964 ஆம் ஆண்டு புயலால்  தனுஷ்கோடி நகரமே அழிந்தது.  இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் பிரதமர் மோடி தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்காக ரூ.208 கோடி மதிப்பீட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், ரயில்வே 
அதிகாரிகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. யை சேர்ந்த ஆய்வுக் குழுவினர் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்தனர். 
ராமேசுவரம் ரயில் நிலையம் முதல் கரையூர், தெற்குகரையூர், ஜடாமகுட தீர்த்தக் கோயில், முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைப்பது குறித்து செயற்கைகோள் உதவியுடன் ஆய்வு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT