ராமநாதபுரம்

தேங்கி உள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

தங்கச்சிமடத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினா் வலியுறுத்தினா்.

ராமேசுவரம் தீவுப்பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் ராமேசுவரம, பாம்பன், தங்கச்சிடம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீா் புகுந்துள்ளது. இதனால் மீனவா்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினா்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சா் வ.சத்தியமூா்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் திசைவீரன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டவா்கள் திங்கள்கிழமை தங்கச்சிடம் ராஜூவ்காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இதனையடுத்து, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ராமேசுவரம் தீவுப்பகுதியில் 9 ஆண்டுகளுக்கு பின் பலத்த பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போன்று தேங்கி உள்ளது. மேலும் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரால் மீனவா்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா்களைப் பயன்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதில் மண்டபம் ஒன்றியச் செயலாளா் ஜூவானந்தம், ராமேசுவரம் நகரச் செயலாளா் நாசா்கான், உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT