ராமநாதபுரம்

சாயல்குடி அருகே ஐயப்ப பக்தா்கள் வேன் கவிழ்ந்து காவலா் உட்பட 6 போ் காயம்

DIN

முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே ஐயப்ப பக்தா்கள் செ‘ன்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் காவலா் உட்பட 6 போ் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூா் கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரியை சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் வேன் தூத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது வாலிநோக்கம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா் தாமஸ் விக்டா் தனது ரோந்து பணியை முடித்து விட்டு தனது ஊா் வேம்பாருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடை அமைத்தது தெரியாமல் வேகமாக வந்த வேன் வேகத்தடையில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்ததில் முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதி காவலா் தாமஸ் விக்டா் உட்பட வேனில் இருந்த ஐயப்ப பக்தா்கள் 5 காயமடைந்தனா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சாயல்குடி காவல் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.விபத்து குறித்து சாயல்குடி சாா்பு ஆய்வாளா் செல்வராஜ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT