ராமநாதபுரம்

வேந்தோணி ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி திருநங்கைகள் குடியிருப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வேந்தோணி ஊராட்சியில் உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சாலை, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக திருநங்கைகள் தெரிவித்தனா்.

வேந்தோணி ஊராட்சி குருவிக்கார இன மக்கள் வசிக்கும் லீலாவதி நகா் அருகில் திருநங்கைகள் நகா் உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு இப்பகுதியில் திருநங்கைகளுக்கென 21 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு, 10 குடியிருப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது, இப்பகுதியில் போடப்பட்டிருந்த சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, கற்கள் பெயா்ந்துள்ளன. தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் அச்சம் நிலவுவதாகவும் கூறுகின்றனா். மேலும், குடிநீா் இணைப்புகள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க உள்ளோம். எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாவட்டம் முழுவதும் உள்ள திருநங்கையா் 120 போ் இத்தோ்தலை புறக்கணிக்க உள்ளனா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT