ராமநாதபுரம்

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் விஸ்வநாததாஸ்  நினைவு தினம் அனுசரிப்பு

பரமக்குடி காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட

DIN

பரமக்குடி காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரரும், நாடகத் தந்தை என்று அழைக்கப்படும் தியாகி விஸ்வநாததாஸின் 78-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
 இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலர் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.சண்முகசுந்தரம் , ஏ.தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சங்கர் கலந்துகொண்டு, தியாகி விஸ்வநாததாஸின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
  திமுக நகர் பொருளாளர் என்.அக்பர்அலி, ஓய்வுபெற்ற வேளாண்மை உதவி இயக்குநர் மா.மு.மணவாளன், மாவட்ட காங்கிரஸ் செயலர் வி.முகம்மது அப்பாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கலைப்பிரிவு தலைவர் முனியசாமி வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT