கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் நு. ரஜபுதீன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் க. அப்துல்ரஹுகிம், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வணிகவியல் ஆசிரியர் ரவி, கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதவியல் ஆசிரியர் ஆ. நிஜாம்தீன், கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ச. சுலைமான் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், அரசு பொதுத் தேர்வு, அரசு சார்பாக வழங்கப்படும் மேற்படிப்புக்கான உதவித்தொகை மற்றும் பிளஸ் 2 முடித்தவுடன் எந்தத் துறையைத் தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினர். கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் து. முகம்மது ஜஹபர், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் து. அப்பாஸ் முகைதீன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் ராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி முதல்வர் நாதிராபானு கமால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக கல்லூரி முதுகலை வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகலை ஆங்கிலத்துறைத் தலைவர், சு.னு. நெல்சன் டேனியல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.