ராமநாதபுரம்

தையல்நாயகி அம்மன் கோயில்  மண்டலாபிஷேகம்

திருவாடானை அருகேயுள்ள நாகனேந்தல் கிராமத்தில் தையல்நாயகி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை

DIN

திருவாடானை அருகேயுள்ள நாகனேந்தல் கிராமத்தில் தையல்நாயகி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஸ்ரீ தையல்நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன்  5 ஆம் தேதி நடைபெற்றது. 
 அதனைத்தொடர்ந்து ஸ்ரீதையல்நாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டலாபிஷேக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கும்பத்தில் உள்ள புனிதநீரால் ஸ்ரீபெரியநாயகிஅம்மன், காளியம்மன், ஸ்ரீதையல் நாயகி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT