ராமநாதபுரம்

உலக கடல் தினம் ராமேசுவரத்தில் கடல் கழிவுகள் அகற்றம்

DIN


உலக கடல் தினத்தையொட்டி  மீன்வளத்துறை சார்பில் ராமேசுவரம் துறைமுகக் கடற்கரையில் உள்ள கடல் கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சனிக்கிழமை அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதி அதிக கடல் வளத்தை கொண்டுள்ளது. இக்கடல் பகுதியானது ரோச்மான் நகர் பகுதியில் இருந்து எஸ்.பி.பட்டணம் வரையில் நீண்டுள்ளது.
இந்நிலையில், உலக கடல் தினத்தை (ஜூன் 8) முன்னிட்டு ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் கடல் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தொடங்கினர். இதற்கு மீன்வளத்துறை உதவி இயக்குநர் யுவராஜ் தலைமை வகித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கெளதம், ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மீன்வளத்துறை உதவி ஆய்வாளர்கள் அபுதாஹீர், ஈஸ்வரன் மற்றும் மீனவசங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள்,  மீன்வளத் துறையினர் கலந்துகொண்டனர். 
நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் கடல் கழிவுகள் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தி தூக்கி வீசிய சேதமடைந்த பிளாஸ்டிக் வலைகள், கயிறுகள் உள்ளிட்டவற்றை அகற்றினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT