ராமநாதபுரம்

வாலிநோக்கம் கடற்கரையில் பீடி இலை மூட்டைகள் ஒதுங்கின

DIN

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பீடி இலைகள் அடங்கிய 10  சிறிய மூட்டைகள் கரை ஒதுங்கின. 
சமீபமாக, ராமநாதபுரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கலால் வரிச் சோதனையில் அவ்வப்போது பீடி இலைகள் பிடிபட்டும் வருகின்றன. 
இந்நிலையில், வாலிநோக்கம் கடற்கரையில் 10 சிறிய மூட்டைகள் ஒதுங்கியது குறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, அங்கு சென்ற போலீஸார், மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது அவற்றில் பீடி தயாரிப்பதற்கான இலைகள் இருந்துள்ளன. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT