ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ஜூன் 26 மின் தடை

DIN

ராமநாதபுரம் நகரில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக புதன்கிழமை (ஜூன் 26) குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரியப் பிரிவு நகர உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
     தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்படி, அச்சுந்தன்வயல் முதல் ஈசிஆர் சாலை சந்திப்பு வரை இரு வழிச்சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 
 இப்பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க, ராமநாதபுரம் எம்.ஜி. மஹால் முதல் பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் வரை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குண்டுக்கரை முருகன் கோவில் தெரு, வனசங்கரி அம்மன் கோவில் தெரு, எல்.ஐ.சி., எம்.ஜி.மஹால், கூரியூர், பெரியார் நகர், நொச்சியூரணி, எட்டிவயல், எல்.கருங்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT