ராமநாதபுரம்

தமிழ்ச்சங்கத்தில் மே 5 இல் முப்பெரும் விழா

DIN

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் மே 5 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறுகிறது. 
 திருக்குறள் விழா, தமிழ்ச்சங்க நிறுவனர் நினைவு நாள் மற்றும் நல்லாசிரியை நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா மே 5 ஆம் தேதி மாலையில் சங்க வளாகத்தில் உள்ள அரவிந்த அரங்கத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு பேராசிரியர் ரா.வேலு தலைமை வகிக்கிறார்.  தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமால் படத்தை சங்கத்தின் துணைத் தலைவர் மு.ச.கருணாநிதி திறந்து வைக்கிறார்.  விழாவில் நடைபெறும் கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் மு.ஹதாயத்துல்லா, நா.வேலுச்சாமி துரை ஆகியோர் பங்கேற்கின்றனர். 
தமிழ்ச்சங்க பொருளாளர் கா.மங்களசுந்தரமூர்த்தி மலரும் நினைவுகள் எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். நல்லாசிரியை கிளாடிஸ் ஜெயகுமாரி நினைவுச் சிறப்புச் சொற்பொழிவாக திருவள்ளுவரின் தொழிற்புரட்சி சிந்தனைகள் எனும் தலைப்பில் சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மைய முன்னாள் பேராசிரியர் கு.மோகனராசு உரையாற்றுகிறார்.  பின்னர் பார்வையாளர்களின் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெறும். அதில் சிறப்பான விடையளிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT