ராமநாதபுரம்

கமுதி அருகே சீரமைக்கப்படாத சாலையால் பொதுமக்கள் அவதி

கமுதி அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையால்,  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

DIN


கமுதி அருகே பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையால்,  பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கமுதி அருகே 60 குடும்பங்கள் வசிக்கும் புளிச்சிகுளத்துக்கு சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வெளியூர்களுக்குச் செல்லவேண்டுமெனில், புளிச்சிகுளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள தலைவநாயக்கன்பட்டி விலக்கு சாலைக்குச் சென்று, அங்கிருந்து கமுதி -அருப்புக்கோட்டை விலக்கு சாலைக்கு செல்ல வேண்டும். 
தலைவநாயக்கன்பட்டி விலக்கு பகுதியிலிருந்து புளிச்சிகுளத்துக்குச் செல்லும் 2 கி.மீ. தொலைவிலான சாலை 18 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் இதுவரை சீரமைக்கப்படாததால், தார் சாலை உருக்குலைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. 
இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் 6 கி.மீ. தொலைவு சுற்றி கீழராமநதி விலக்குச் சாலைக்குச் சென்று, அங்கிருந்து கமுதிக்கு 12 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு கூட, கமுதி, அருப்புக்கோட்டைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இக் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
எனவே, இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT