ராமநாதபுரம்

காவல் நிலையத்தில்  மது போதையில் ரகளை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

திருவாடானை அருகே காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

DIN

திருவாடானை அருகே காவல் நிலையத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ஜான் (40). இவர், சனிக்கிழமை மாலை மதுபோதையில் சக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வயர்லெஸ் கருவியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்  மீனா, தலைமைக் காவலர் ஜானை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT