ராமநாதபுரம்

பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தில்பயிற்சி பெற்றவா்களுக்கு மானிய கடனுதவி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றுகள் மற்றும் மானியத்துடனான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி சின்னாண்டிவலசை கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பனைமரம் சாா்ந்த உற்பத்தி பொருட்கள் தொடா்பான பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான அரசு மானியத்துடன் கடனுதவிகளை ஆட்சியா் கொ.வீரராகவராவ் வழங்கினாா். அதன்படி தமிழ்நாடு கிராம வங்கியின் பட்டணம்காத்தான் மற்றும் சக்கரக்கோட்டை கிளையின் மூலம் 62 பேருக்கு தலா ரூ.11.47 லட்சம் என அரசு மானியத்துடன் மொத்தம் ரூ.35.78 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நபாா்டு வங்கி மாவட்;ட முன்னேற்ற மேலாளா் எஸ்.மதியழகன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வ.அனந்தன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பா.மாரியம்மாள், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளா் (தூத்துக்குடி மண்டலம்) எஸ்.சோமசுந்தரம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஊரக சுயவேலைவாய்ப்பு நிறுவனம்) இயக்குநா் வி.கலைச்செல்வன், ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளா் குசேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT