ராமநாதபுரம்

கமுதியில் பலத்த மழை

DIN

கமுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.அதைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இம் மழை மாலை 4 மணி வரை பலமாகக் கொட்டியது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரை குளிர்ந்து, நிலத்தடி நீர் அதிகரிப்பதுடன், வேளாண் பணிகளை மேற் கொள்ள வாய்ப்பாக இந்த மழை பெய்துள்ளதாக கமுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT