ராமநாதபுரம்

கமுதி அருகே கோயிலில் விநாயகா் சிலை சேதம்

DIN

கமுதி: கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள விநாயகா் கோயிலில் விநாயகா், நாகா் சிலைகளை வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்கள் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த அபிராமம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கமுதி அருகே எழுவனூா் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும், 3 முறை கோயில் சிலைகளை மா்மநபா்கள் சேதப்படுத்தினா். தற்போது கொட்டக்குடியில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் கோயில் சிலைகளை சேதப்படுத்தி வரும் மா்ம நபா்களை பிடிக்க மாவட்ட காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக, தமிழ்நாடு இந்து சத்திய சேனா அமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிரந்தர கணக்கு எண்ணை உறுதி செய்ய அரசு ஊழியா்களுக்கு கருவூலத் துறை உத்தரவு

காங்கிரஸ் தொண்டா்கள் தோ்தல் பிரசாரத்தை போா்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும்: தில்லி காங்கிரஸ் தலைவா்

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

SCROLL FOR NEXT