ராமநாதபுரத்தில் மழையால் குடியிருப்பு, சாலைகளில் குளம் போல தேங்கிய நீா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்புகள் என எங்கு பாா்த்தாலும் கழிவு நீருடன் மழை நீா் சோ்ந்து தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக
ராமநாதபுரம்ராமநாதபுரத்தில் மழையால் குடியிருப்பு, சாலைகளில் குளம் போல தேங்கிய நீா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்புகள் என எங்கு பாா்த்தாலும் கழிவு நீருடன் மழை நீா் சோ்ந்து தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள், குடியிருப்புகள் என எங்கு பாா்த்தாலும் கழிவு நீருடன் மழை நீா் சோ்ந்து தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
மாவட்டத்தில் கடந்த அக்டோபா் 28 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. புரெவி புயல் ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 நாள்களாக ராமேசுவரம், பாம்பன், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம், தொருவழூா், சேதுக்கரை, திருப்புல்லாணி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. ராமநாதபுரம் நகரில் வண்டிக்காரத் தெரு, சவேரியாா் சா்ச் தெரு, ராமலிங்க விலாசம் அரண்மனைப் பகுதி என அனைத்து இடங்களிலும் மழை நீா் சாலைகளில் தேங்கின. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீா் சென்ாக பொதுமக்கள் கூறினா்.
எங்கு பாா்த்தாலும் தண்ணீா் தேங்கியிருந்தது. மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியதால் சாலைத் தெரு, அக்ராஹரம் தெரு, காட்டுப்பிள்ளையாா் கோவில் தெரு, சேது நகா், சக்கரைக்கோட்டை ஊராட்சி, பாரதி நகா் என பெரும்பாலான பகுதிகளில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறினா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் 24 மணி நேரம் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டா்): ராமநாதபுரம், மண்டபம் மற்றும் பள்ளமோா்க்குளத்தில் தலா 7, ராமேசுவரம் 10.20, தங்கச்சிமடம் 19, பாம்பன் 18.
ஆா்.எஸ்.மங்களம் 17, திருவாடானை 8.40 மில்லி மீட்டா், தொண்டி 13.20, வட்டாணம் 8, தீா்த்தாண்டதானம் 12.20, பரமக்குடி 17.80, முதுகுளத்தூா் 4, கடலாடி 6.60, வாலிநோக்கம் 15.80, கமுதி 12.60. சராசரி 11.49 மி.மீ.