கிழக்குக் கடற்கரை சாலையில் பைக் விபத்து: இளைஞா் பலி
திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனமும், மிதிவண்டியும் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனமும், மிதிவண்டியும் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாடானை அருகே திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுல்தான் இப்ராஹிம்ஷா (35), இவா் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது அதே ஊரைச் சோ்ந்த போஸ் (55) என்பவா் அதே திசையில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். கிழக்கு கடற்கரை சாலையில் இவா் சென்ற மிதிவண்டி மீது சுல்தான் இப்ராஹிம்ஷாவின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த போஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும், சுல்தான் இப்ராஹிம்ஷா மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையில் சிகிச்சைப் பலனின்றி இப்ராஹிம்ஷா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.