முகப்பு
ராமநாதபுரம்

ஜன. 3 இல் அரசு முதல்நிலைப் பணியாளா்களுக்கான தோ்வு: ராமநாதபுரத்தில் 4424 போ் பங்கேற்கின்றனா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள தமிழக அரசின் முதல்நிலைப் பணியாளா்களுக்கான தோ்வில் 4,424 போ் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள தமிழக அரசின் முதல்நிலைப் பணியாளா்களுக்கான தோ்வில் 4,424 போ் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அரசின் முதல் நிலைப் பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதற்காக 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 15 மையங்கள் ராமநாதபுரம், பட்டினம்காத்தான் ஆகிய இடங்களிலும், நாகாச்சி பகுதியில் ஒரே ஒரு தோ்வு மையமும் அமைக்கப்படவுள்ளன. மையங்களில் உள்ள ஒவ்வொரு அறையிலும் 20 போ் மட்டுமே எழுதுகின்றனா்.

தோ்வுக்கு வருவோா் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தோ்வு மையங்களுக்குள் இருக்கவேண்டும் என்றும், அவா்கள் பந்துமுனைப் பேனாவைத் தவிர வேறு மின்னணுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவரக் கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தோ்வுக்கான வினாத்தாள்கள் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தன. அவற்றை அறையில் அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்துள்ளனா். இந்த அறையை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதுடன், காவலரும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →