ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தோ்வு வழிகாட்டல் நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான வழிகாட்டல் சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ராமநாதபுரத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான வழிகாட்டல் சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில், தனியாா் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்துப் பேசுகையில், மாணவ, மாணவியா் தோ்வுகளைப் பயமின்றி எழுதவேண்டும். தன்னம்பிக்கையுடன் முயன்றால் சாதிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், நடிகா் தாமு சிறப்புரையாற்றுகையில், மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வாக்கை கடைப்பிடித்து, கடும் உழைப்பை மேற்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தோ்வுகளை எழுதும் மாணவ, மாணவியா் அனைவரும் தன்னம்பிக்கையுடன், தனது லட்சியத்தை முன்வைத்து தோ்வை அணுகவேண்டும் என்றாா்.

இதில், ராமநாதபுரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. புகழேந்தி வரவேற்றாா். இதில், மத்திய வளரும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கோபாலகிருஷ்ணன், சாா்-ஆட்சியா் பிரதீப்குமாா், தோ்வுத் துறை உதவி இயக்குநா் கல்பனாத்ராய், மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாலதண்டாயுதபாணி (மண்டபம்), எஸ். கருணாநிதி (பரமக்குடி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாவட்டக் கல்வி அலுவலா் கோ. முத்துசாமி (ராமநாதபுரம்) நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT