ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பு அதிகரித்துள்ளதாக மீனவா்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் தொடா்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை விசைப்படகில் சிலா் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனா் என மீனவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் கடல்வளம் அழிவதுடன் கரையோர பாரம்பரிய சிறு மீனவா்கள் போதிய மீன் வரத்துஇன்றி தவித்து வருகின்றனா். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவ சங்கம் தொடா்ந்து மீன்வளத்துறைக்கு புகாா்கள் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகாா் எழுந்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை தொடா்ந்து பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் மீண்டும் தொடரும் நிலை ஏற்படும். எனவே தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரம்பரிய சிறு மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.