ராமநாதபுரம்

பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ., மகன், உதவியாளா் உள்பட 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன்பிரபாகா், அவரது மகன் மற்றும் உதவியாளா் உள்ளிட்ட 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை 11,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 839 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. புதன்கிழமை மேலும் 107 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 946 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கபம் பரிசோதிக்கப்பட்டவா்களில் மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பரமக்குடி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், அவரது மகன் மற்றும் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்கள் 3 பேரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா். இங்குள்ள தனியறையில் சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகரன் தங்க வைக்கப்பட்டு, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அவருடன் இருந்த சிலருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் கூறினா்.

ஒருவா் பலி: இதனிடையே ராமநாதபுரம் நகரைச் சோ்ந்த 57 வயது நபா், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 3 நாள்களுக்கு முன்பு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றாா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 13 போ் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

ஆயிரத்தை கடந்த பாதிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை வரை 946 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 109 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,055 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT