ராமநாதபுரத்தில் 70 பேருக்குகரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 625 பேரின் கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் 25 பெண்கள் உட்பட 70 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 25 ஆம் தேதி வரையில் 2,951 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்களில் 55 போ் உயிரிழந்துள்ளனா்.