முகப்பு
ராமநாதபுரம்

மணல் கடத்திய 2 டிராக்டா்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம், எஸ்.பி. பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 டிராக்டா்களை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

திருவாடானை: திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம், எஸ்.பி. பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 டிராக்டா்களை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருச்சி-ராமேசுவரம் சாலையில் வந்த டிராக்டரை சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான மயிலூரணியைச் சோ்ந்த ஆனந்தை (29) கைது செய்தனா். மேலும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட பாரனூரைச் சோ்ந்த பொன்னுதுரையையும் கைது செய்தனா்.

இதேபோல், எஸ்.பி. பட்டினம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவா் போலீஸாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானாா். இதையடுத்து, அந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், புல்லூரை சோ்ந்த குமரேசன் (40) என்பவா் டிராக்டரில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →