முகப்பு
ராமநாதபுரம்

தடைக் காலம் முடிவடைந்து 82 நாள்களுக்கு பின் மீன்பிடிக்கச் செல்லும் ராமேசுவரம் மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து 82 நாள்களுக்கு பின்னர் சனிக்கிழமை விசைப்படகுகள் மீன்பிக்கச் செல்லுகின்றனர். இதற்கான பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

ராமேசுவரத்தில் இருந்து 82 நாள்களுக்கு பின்னர் சனிக்கிழமை விசைப்படகுகள் மீன்பிக்கச் செல்லுகின்றனர். இதற்கான பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இன பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா நோய்பரவலை தடுக்கும் விதமாக முன்கூட்டியே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

78 நாள்களுக்கு பின் பாம்பன் தென்கடலில் பகுதியில் மீன்படிக்கச் சென்றனர். இதனையடுத்து, பாக்நீரினை பகுதியாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1600 க்கும் மேற்பட்ட மீனவர்கள்  சனிக்கிழமை முற்பகல் மீன்பிடிக்கச் செல்ல உள்ளனர். 

இதனால் அந்தந்த துறைமுகங்களில் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுக்கு தேவையான வலைகள், டீசல், மீன்களை பதப்படுத்தி வைக்க ஐஸ் கட்டிகள் படகுகளில் ஏற்றி வைத்து மீன்பிடிக்கச் செல்ல வெள்ளிக்கிழமை ஆயத்தமாக மாகினர். 82 நாட்களுக்கு பின்னர் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை செல்லுகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →