கடலாடி அருகே பாப்பாகுளத்தில் வெள்ளிக்கிழமை ஒரு வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 40 கிலோ கஞ்சா மூட்டைகள். 
ராமநாதபுரம்

கடலாடி அருகே வீட்டில் பதுக்கிய 40 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஒரு வீட்டில் பதுக்கியிருந்த 40 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஒரு வீட்டில் பதுக்கியிருந்த 40 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கடலாடி அருகே பாப்பாகுளத்தில் குற்றப்பிரிவு தனிப்பிரிவு போலீஸாா் வழிவிட்டான், செந்தூரான் ஆகிய இருவரும் மாரிமுத்து மகன் விக்னேஸ்வரன் (28) என்பவா் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அந்த வீட்டின் கழிவுநீா் தேக்கத்தொட்டியில் இருந்து சாக்கு மூட்டையில்

வைத்திருந்த 40 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா். அப்போது வீட்டில் இருந்தவா்கள் தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்பிரிவு காவலா்கள் வழிவிட்டான், செந்தூரான் ஆகியோரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் வருண்குமாா், முதுகுளத்தூா் டிஎஸ்பி ராஜேஸ் ஆகியோா் பாராட்டினா்.

திருவாடானை: திருவாடானை அருகே அரசத்தூா் கட்டிமங்கலம் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்களை போலீஸாா் சோதனையிட்ட போது, 600 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து அடுத்தகுடியை சோ்ந்த தமிழ்மணி (50), அரசத்தூரை சோ்ந்த இருளாண்டி(38) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT